‘பார்டர்-2’ திரைப்படத்திற்கு, ஐக்கிய அரபு அமீரகத்தில் தடை..

Web Ads

விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் வெளியீடு தொடர்பாக தடைகளை சந்தித்து வருகிறது. இது பற்றிய வழக்கு விசாரணையில் நீதிமன்ற தீர்ப்பு நாளை மறுநாள் 27-ந்தேதி வெளியாகிறது. இதனை படக்குழு மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் நிகழ்ந்த ஒரு திரைப்படத்தின் நிலையை பார்ப்போம்..

இயக்​குநர் ஜே.பி.தத்தா இயக்​கத்​தில் 1997-ம் ஆண்டு வெளி​யான இந்தி திரைப்​படம் ‘பார்டர்’. 1971-ம் ஆண்டு நடந்த இந்​தி​யா- பாகிஸ்​தான் போர் பின்னணியில் உருவான திரைப்​படம் இது. இப்படத்தில் சன்னி தியோல், சுனில் ஷெட்​டி, ஜாக்கி ஷெராப் உள்​ளிட்​டோர் நடித்​திருந்​தனர். இப்படம் வரவேற்​பைப் பெற்​றது.

இப்​படத்​தின் 2-ம் பாகம் இப்​போது உரு​வாகி இருக்​கிறது. இதை அனு​ராக் சிங் இயக்​கி​யுள்​ளார். முதல் பாகத்​தில் நடித்​திருந்த சன்னி தியோலும் நடித்துள்ளார். வருண் தவண், தில்ஜித் தோசாஞ், அஹான் ஷெட்​டி உள்பட பலர் நடித்​துள்​ளனர். அதிக எதிர்​பார்ப்​பைக் கொண்ட இப்படம் வெளி​யானது.

இந்நிலை​யில் ‘துரந்​தர்’ படத்தைப் போல ‘பார்டர் 2’ படமும் வளைகுடா நாடு​களில் வெளி​யாக​வில்​லை. பாகிஸ்​தானுக்கு எதிராக இப்படத்தின் கதை இருப்​ப​தாகக் கூறி, பஹ்ரைன், குவைத், ஓமன், கத்​தார், சவுதி அரேபியா மற்​றும் ஐக்​கிய அரபு அமீரகத்தில் தடை விதிக்​கப்​பட்​டுள்ளது.

gulf nations ban border2 movie
gulf nations ban border2 movie