ஜி பி முத்து அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு அதற்காக தயாராகும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

பிரபல சமூக வலைத்தளமாக இருக்கும் youtube பக்கத்தில் பலவிதமான நகைச்சுவை வீடியோக்களை பதிவிட்டு பிரபலமான ஜி பி முத்து அவர்கள் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி இருக்கிறார்.

இந்நிகழ்ச்சி தொடங்கி இருக்கும் இந்த இரண்டு நாட்களில் அவர் செய்யும் சேட்டைகளின் கலகலப்பான ஆன வீடியோக்கள் இணையத்தை கவர்ந்து வரும் நிலையில் தற்போது ஜி பி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு அதற்காக பேசியல் செய்து தயாராகும் காமெடியான வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது. அதனை ரசிகர்கள் கண்டு களித்து இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.