மிரட்டப்போகும் ஜெயில் சண்டைக்காட்சி.. குட் பேட் அக்லி படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!
குட் பேட் அக்லி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் மைதிரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மேலும் பிரசன்னா,அர்ஜுன் தாஸ்,சுனில்,திரிஷா,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றனர். இந்தத் திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் இந்த படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்றை பத்திரிக்கையாளர் பகிர்ந்துள்ளார்.
அதில் ஏப்ரல் 10ஆம் தேதி தமிழ்நாடு மட்டும் இல்லாமல் உலகமே தெறிக்கப்போகுது.. ஜெயிலில் ஒரு சண்டைக் காட்சி இருப்பதாகவும்,அந்த காட்சி எப்படி இருக்க போகிறது என்று பாருங்க அஜித் கலக்கிருக்காரு..டூப் போடாம பண்ணிருக்காரு அந்த ஜெயில் பிரம்மாண்டமாக போடப்பட்ட செட். அதில் பேட் அஜித் போடற சண்டை தான் அது என்று கூறியுள்ளார்.
இவர் கூறிய இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரிக்கச் செய்துள்ளது.
