Web Ads

நடிகையின் கை-கால்களை கட்டிப்போட்டு, நகை-பணம் கொள்ளை: திரையுலகில் பரபரப்பு

Web Ad 2

நடிகை ஒருவரிடம் கொள்ளையடித்த சம்பவம் பற்றிய தகவல்கள்..

கடை திறப்பு விழாவில் கலந்துகொள்ள, பாலிவுட் நடிகை ஒருவர் ஹைதராபாத்துக்கு வந்துள்ளார். பஞ்சாரா ஹில்ஸ் அருகே உள்ள வசாப் டேங்கில் இருக்கும் ஹோட்டலில் அவர் தங்கியிருந்தபோது, அவரை தாக்கிவிட்டு அடையாளம் தெரியாத 4 பேர் அவரிடம் இருந்த பொருட்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகையின் புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த புகாரில் நடிகை கூறியுள்ளதாவது, ‘நான் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஹோட்டல் அறைக்குள் 2 பெண்களும் மற்றும் 2 இளைஞர்களும் வந்தனர்.

என்னைத் தாக்கி, தகாத முறையில் நடந்து கொண்டனர். நான் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது அவர்கள் என்னை பெட்டில் அமுக்கி என் 2 கைகளையும், கால்களையும் கட்டிவிட்டு அங்கிருந்த என்னுடைய பொருட்களை சூறையாடி சென்று விட்டனர்’ என கூறியுள்ளார்.

நடிகையின் பையில் இருந்த பணம் மற்றும் சில தங்க நகைகளையும் அவர்கள் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். நடிகையிடம் ரூ.50,000 இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சிசிடிவி கேமரா காட்சியை கொண்டு, இந்த செயலில் ஈடுபட்ட 4 பேர் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக வந்த தகவலில்.. நடிகையின் பெயர் தெரிவிக்கப்படவில்லை.

gang assaults actress robs her of cash and jewellery