flimfare Awards 2019
2019-ம் ஆண்டிற்கான பிலிம்ஸ் பேர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரண்டு நடிகர்கள் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களாக விருது பெற்றுள்ளனர்.

திரையுலக பிரபலங்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் பல விருது விழாக்கள் நடைபெறுகின்றன. அவைகளில் முக்கியமான ஒன்று தான் பிலிம்ஸ் பேர் விருதுகள்.

இந்த வருடத்திற்கான விருது விழா நடந்துள்ளது. இதில் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகருக்கான விருதை தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் பெற்றுள்ளனர்.

தனுஷிற்கு வடசென்னை படத்திற்காக அளிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதிக்கு 96 படத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகைக்கான விருதை த்ரிஷா 96 படத்திற்காக பெற்றுள்ளார்.சிறந்த படத்திற்கான விருதை பரியேறும் பெருமாள் திரைப்படம் தட்டி சென்றுள்ளது.

சிறந்த இயக்குநருக்கான விருதை ராட்சசன் பட இயக்குனர் ராம் குமார் பெற்றுள்ளார்.

சிறந்த நடிகர் ( க்ரிட்டிக்ஸ் ) விருதை அரவிந்த் சாமி செக்க சிவந்த வானம் படத்திற்காக பெற்றுள்ளார். மேலும் சிறந்த நடிகை ( கிரிட்டிக்ஸ் ) விருதை ஐஸ்வர்யா ராஜேஷ் கனா படத்திற்காக பெற்றுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.