
இந்த ஆண்டில் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய ஐந்து திரைப்படங்கள்..! உங்களுடைய ஃபேவரைட் படம் எது?
இந்த ஆண்டில் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய 5 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படத்திற்கு மிகவும் வரவேற்பு கொடுப்பது அதிகம். அதிலும் குறிப்பாக வசூலே ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது என்றே சொல்லலாம். இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து பல படங்கள் ரிலீஸ் ஆனது. ஆனால் அதில் லாபத்தை பார்த்து வசூலில் மாஸ் காட்டிய ஐந்து படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் 140 கோடி வரை வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது.
இரண்டாவது இடத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து உள்ளது.
விஷால் நடிப்பில் வெளியான மதகஜராஜா திரைப்படம் 57 கோடிகளை வசூல் செய்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
மணிகண்டன் நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் 28 கோடிகளை வசூல் செய்து நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான காதலிக்க நேரமில்லை திரைப்படம் 12 கோடி வசூல் செய்து ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.
இந்த ஐந்து திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
