சர்தார் 2 : படப்பிடிப்பின் போது கார்த்திக்கு ஏற்பட்ட விபத்து., படக்குழு எடுத்த முடிவு.!!
சர்தார் 2 படப்பிடிப்பின் போது கார்த்திக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் மெய்யழகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படியான நிலையில் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சண்டைக்காட்சி எடுத்த போது கார்த்திக் காலில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவருக்கு வீக்கம் அடைந்ததால் ஒரு வாரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் சொல்லியுள்ளார்களாம். இதனால் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு படக்குழு சென்னை திரும்பி உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
