தனலட்சுமியை வெளியேற்ற வேண்டும் என நினைத்த ரசிகர்கள் தற்போது வேறு ஒரு போட்டியாளருக்கு கட்டம் கட்ட தொடங்கி உள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜி பி முத்து, வி ஜே மகேஸ்வரி, மைனா நந்தினி, ரக்ஷிதா, அஸீம் என மொத்தம் 21 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளனர்.
நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து தனலட்சுமி ஜிபி முத்துவை சீண்டிய படி இருக்க அவரை முதலில் வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் கூறி வந்த நிலையில் தற்போது ரசிகர்கள் மனதை மாற்றிக்கொண்டு வேறு ஒரு போட்டியாளரை வெளியேற்ற வேண்டும் என மும்மரமாக செயல்பட தொடங்கியுள்ளனர்.
மகேஸ்வரியை தான் முதலில் வெளியேற்ற வேண்டும், காரணம் எல்லோரது விஷயத்திலும் தேவையில்லாமல் தலையிடுகிறார். சத்தம் போட்டு பேசினால் எப்போதும் ப்ரோமோவில் வந்துவிடலாம் என திட்டம் போட்டு அவர் இப்படி எல்லாம் செய்து வருகிறார் முதலில் அவரை வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதனால் தற்போது வரை டேஞ்சர் போனில் தனலட்சுமி மற்றும் மகேஸ்வரி என இருவர் மட்டுமே இருப்பதாக சொல்லப்படுகிறது. நீங்க யாரை வெளியேற்ற விரும்புகிறீர்கள் என்பதை கமெண்ட் செய்யுங்கள்.