Oplus_0

பூஜையுடன் தொடங்கியுள்ளது மாரி செல்வராஜின் அடுத்த படம். 

Baizan Movie First Look and Shooting Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா படத்தின் ரீமேக் மூலம் தமிழில் அறிமுகமானார். 

Oplus_0

இதை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அப்பாவுடன் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் விளையாட்டை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ‌

ஆனால் படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளதாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 

இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன் என பலர் இணைந்து நடிக்க ‘பைசன்’ என டைட்டில் வைத்துள்ளனர்.

இந்த படத்துக்கு நிவாஸ் K பிரசன்னா இசையமைக்க, எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.