First Semi-final Gets Affected by Rain : india vs New zealand, India, Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, India, Sports

First Semi-final Gets Affected by Rain :

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

இன்றைய போட்டி நடைபெறும் மான்செஸ்டரில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இங்கிலாந்து நாட்டின் வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று மழை பெய்து ஆட்டம் தடைபட்டால் என்ன நடக்கும் என்பதை தற்போது பார்ப்போம்.

இந்தியா, நியூசிலாந்து இடையேயான இன்றைய அரையிறுதி போட்டி மழையால் ஒருபந்து கூட வீசப்படாமல் முற்றிலும் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டே’ முறை கடைபிடிக்கப்படும். அதாவது போட்டி நாளை நடைபெறும்.

நேற்று விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம், இன்று அஜித் ரசிகர்களுக்கு – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

நாளையும் மழை வந்து போட்டி பாதிக்கப்பட்டால் புள்ளிகளின் அடிப்படையில் இந்தியா நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.

ஒருவேளை போட்டியின் இடையில் மழை பெய்து ஆட்டம் தடைப்பட்டால் வழக்கம்போல் டக்வொர்த்-லீவிஸ் முறைப்படி வெற்றி பெறும் அணி எது என்பது முடிவு செய்யப்படும்.

மேலும் இன்றைய வானிலை அறிக்கையின்படி போட்டியின் இடையிடையே மட்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் போட்டி முற்றிலும் பாதிக்கப்படும் வகையில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. என்ன நடக்கபோகிறது என்பதை காலம் தான் பதில் சொல்லும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.