First place Indian Team :

First place Indian Team : உலக கோப்பை தொடங்குவதற்கு முன் இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தது. குறிப்பாக கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து முதல் இடத்தை தக்க வைத்திருந்தது.

உலகக்கோப்பையில் முதல் ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் அரையிறுதிக்கு எளிதாக முன்னேறும் என்று எதிர்பார்த்த நிலையில் இலங்கை, ஆஸ்திரேலியாவிடம் அடுத்தடுத்து தோல்வியடைந்து பிரச்சனையில் சிக்கியுள்ளது.

NGK நிலை என்னாச்சு? நேற்று சென்னையை கலக்கிய டாப் 5 படங்கள் லிஸ்ட் இதோ.!

இந்தியா ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று அசத்தியது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.

தோல்வியை சந்திக்காமல் இருப்பதால் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்தியா 123 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இங்கிலாந்து 122 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து 116 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.