2023 ஆம் ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் திரைப்படம் துணிவு தான் என்று தயாரிப்பாளர் போனி கபூர் ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். அவர்களது நடிப்பில் கடந்த 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான படங்கள் வசூல் ரீதியாக உலக அளவில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படங்கள் வெளியாகி 25 நாட்கள் கடந்துள்ள நிலையில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் பகிர்ந்திருக்கும் பதிவு வைரலாகி வருகிறது. அதில் அவர், 2023 ஆம் ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் திரைப்படம் என்றால் அது துணிவு தான் என்று பதிவிட்டிருக்கிறார் மேலும் அதில் ‘ரியல் வின்னர்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பதிவு தல ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.