Pushpa 2

கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த தாலிக்கயிறு குறித்து, ரசிகர்களுக்குள் தகராறு..

கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த தாலியால், ரசிகர்களுக்குள் ஏற்பட்ட வாதம்-விவாதம் பற்றி பார்ப்போம்..

காளீஸ் இயக்கத்தில் அட்லி தயாரித்திருக்கும் பேபி ஜான் பாலிவுட் படம் வரும் 25-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.

விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ பட ரீமேக்கான பேபி ஜான் படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கப்பி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், படத்தை விளம்பரம் செய்ய மும்பையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்தது. அதில், கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார்.

காதலர் ஆண்டனி தட்டிலை டிசம்பர் 12-ம் தேதி திருமணம் செய்து கொண்ட பிறகு கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்ட முதல் பட விழாவாகும். சிவப்பு நிற கவுனில் அழகாக வந்திருந்தார் கீர்த்தி. ஆனால், அனைவரின் கவனமும் அவர் கழுத்துப் பக்கம் தான் சென்றது.

மஞ்சள் கயிறால் ஆன தாலியை அணிந்திருந்தார் கீர்த்தி சுரேஷ். அந்த புகைப்படம், வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. அதை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

‘இந்த கவுனுக்கு தாலி அணியவில்லை என யார் அழுதார்?. தாலிக்கான மரியாதையை கெடுக்க வேண்டாம். இது ஒன்றும் விளம்பரத்திற்காக அணியும் ஆபரணம் இல்லை. புனிதமான திருமாங்கல்யம். அதை கொச்சைப்படுத்தி விட்டார் கீர்த்தி’ என்கிறார்கள்.

ஆளாளுக்கு விளாசுவதை பார்த்த கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் கூறியிருப்பதாவது, ‘நயன்தாரா மட்டும் திருமணமானதும், கணவர் விக்னேஷ் சிவனுடன் தேனிலவுக்கு சென்ற இடத்தில் பனியன் அணிந்து தாலி அணிந்திருந்தாரே. அப்பொழுது மட்டும், ‘ப்பா.. நயன்தாராவை பாருங்க, தங்கச் செயினால் ஆன தாலி அல்ல, மாறாக மஞ்சள் கயிற்றால் ஆன தாலி அணிந்திருக்கிறார். என்ன ஒரு எளிமைனு பாராட்டினீங்க.

தற்போது, கீர்த்தி தாலி அணிந்தால் மட்டும் திட்டுவது சரியில்லை. நயன்தாரா அணிந்த உடையுடன் தாலி அணியலாம் என்றால், கீர்த்தி அணிந்த கவுனுடனும் தாலி அணியலாம்’ என வாதிடுகின்றனர்.

ஆக, இது குறித்து கோர்ட்டுக்கு போய் தீர்ப்பையும் வாங்கி வந்து விடுவார்கள் போலிருக்கிறது.

fans support actress keerthy suresh over mangalsutra issue
fans support actress keerthy suresh over mangalsutra issue