நீலாம்பரி கதாபாத்திரத்தை மிஸ் பண்ண பிரபல நடிகை.. யார் தெரியுமா?

நீலாம்பரி கதாபாத்திரத்தை பிரபல நடிகை மிஸ் பண்ணியுள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ள திரைப்படம் படையப்பா இந்த படத்தில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கி இருந்தார். மேலும் சிவாஜி கணேசன்,ரஜினி காந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, அப்பாஸ், நாசர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரம் இன்று வரை அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் நடித்ததன் மூலம் புகழை பெற்ற ரம்யா கிருஷ்ணனுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே வந்தது இந்த நிலையில் இந்த கதாபாத்திரத்தில் முதலில் பிரபல முன்னணி நடிகையான மீனா தான் நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

