20 வருடங்களுக்குப் பிறகு விஜய் உடன் கூட்டணி சேர உள்ளார் பிரபல நடிகர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ திரைப்படம் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார்.

லியோ பட ரிலீஸ்க்கு பிறகே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது படப்பிடிப்புக்கான முதல் கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இருபது வருடங்களுக்குப் பிறகு விஜய் உடன் சேர்ந்து பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தில் நடித்திருந்த ஜெய் தான் அந்த நடிகர் என சொல்லப்படுகிறது. தற்போது பிரபல நடிகராக படங்களில் ஹீரோவாக நடித்து வரும் ஜெய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.