
டிவி சேனலால் லியோ இசை வெளியீட்டு விழாவில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் லியோ. அனிருத் இசையில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படியான நிலையில் படக்குழு லியோ இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடந்த திட்டம் போட்டு அதற்கான வேலைகளில் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் லியோ இசை உரிமையை வாங்கிய நிறுவனம் மற்றும் சேட்டிலைட் உரிமையை வாங்கிய தொலைக்காட்சி சேனல் இதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இதனால் சம்மந்தப்பட்டவர்கள் உடன் தயாரிப்பு நிறுவனம் பேச்சு வார்த்த நடத்தியுள்ளது.
இறுதியில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்த முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
