
இந்த குணசேகரனும் தற்காலிகம் தான் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் ஆதி குணசேகரன் ஆக மாரிமுத்து நடித்து வந்த நிலையில் மாரடைப்பு காரணமாக அவர் உயிர் இழக்க தற்போது அவருக்கு பதிலாக வேல ராமமூர்த்தி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

குணசேகரன் ஆக அறிமுகமாகி இவரது காட்சிகள் ஓரிரு நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகின. தற்போது குணசேகர் அண்ணன் கைது செய்யப்பட்டு விட்ட காரணத்தினால் திரும்பவும் கொஞ்ச நாளைக்கு அவருடைய காட்சிகள் இடம் பெறாதது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதற்கு முக்கிய காரணம் இனி குணசேகரன் கதாபாத்திரமே தற்காலிகம் தான் என சொல்லப்படுகிறது. இந்த சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பே வேல ராமமூர்த்தி கால் சீட் பிரச்சினை இருப்பதாக கூறியிருந்தார். இதனால் அவரை அவ்வபோது மட்டுமே சீரியலில் காட்ட உள்ளனர்.
மேலும் குணசேகரன் நா ஜெயிலுக்கு போயிடுவேன் இந்த குடும்பத்தை கட்டுக்கோப்பா வச்சிருக்க வேண்டியது உங்களுடைய பொறுப்பு என கதிர் மற்றும் ஞானத்திற்கு அறிவுரை கூறி இருந்தார். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது இனி கதை கதிர் மற்றும் ஞானத்தை வைத்து தான் நகரும், குணசேகரன் அவ போது எட்டி பார்த்து அறிவுரைகளை மட்டுமே வழங்குவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விஷயம் எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.