
குணசேகரன் போடும் பிளான் ஒருபக்கம் இருக்க ஜனனி அதிரடி முடிவு எடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

இது குறித்த ப்ரோமோ வீடியோவில் வீட்டுக்கு வந்த குணசேகரன் அம்மா விசாலாட்சியிடம் இந்த சொத்தை மீட்டு கொண்டு வர வேண்டியது இந்த வீட்டு மருமகளோட கடமை என சொல்ல ரேணுகா ஆம்பளை ஆள் இத்தனை பேரு இருக்கீங்கல இறங்கி ஆடுங்க என பதிலடி கொடுக்க ஞானம் அடிக்க பாய்கிறார்.

உடனே ஜனனி போதும் நிறுத்துங்க, சொத்தை நாங்க மீட்டு கொண்டு வரோம் என வாக்கு கொடுக்கிறார். அடுத்ததாக ரூமுக்குள் குணசேகரன் தம்பிகளிடம் அடுத்த திட்டத்தை பற்றி சொல்ல கதிர் முகம் மாறுகிறது. இதனால் இன்றைய எபிசோட் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

