ஜனனிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஷக்தி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நேற்றைய எபிசோடு ஈஸ்வரிக்கு தன்னை காலேஜில் காதலித்த நபர் தான் ஜீவானந்தம் என்ற விஷயம் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ரேணுகாவின் பிறந்தநாளுக்கு பரதநாட்டியம் டான்சர் என்பதை ரெஜிஸ்டர் செய்து சர்டிபிகேட்டை கொடுத்து கொடுக்கிறார் ஜனனி.
அதையடுத்து மறுநாள் காலையில் சக்தி படுத்த படுக்கையாக இருக்க அதை பார்த்து ஜனனி அக்காவை கூட்டிட்டு வரேன் என்று வீட்டுக்கு ஓடி வந்து ரேணுகா மற்றும் நந்தினி இடம் எதையோ சொல்கிறார். இதெல்லாம் வைத்து பார்க்கையில் சக்திக்கு அம்மை போட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.