
சொத்தை மீட்க குணசேகரன் பிளான் போட கலாய்த்து விட்டு உள்ளார் கரிகாலன்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் ஆடிட்டருடன் வீட்டுக்கு வந்த நபர் முதலில் அந்த ரெஜிஸ்ட்ரேஷன் பொய்யானது என நிரூபிக்கணும் என்று சொல்ல அது எப்படி பண்றது என்று குணசேகரன் கேள்வி கேட்க தெரிஞ்சா சொல்ல மாட்டாங்களா என கரிகாலன் கலாய்த்து விடுகிறார்.

அடுத்து ஜனனி சக்தி ஜீவானந்தம் பற்றிய தகவல்களை திரட்டி வந்த பிறகு குணசேகரன் எப்படியும் அவரை சந்திக்காமல் எதுவும் பண்ண முடியாது, அதுக்கு முன்னாடி நான் ஜீவானந்தத்தை மீட் பண்ணுவேன் என்று சொல்கிறார்.

