ENPT film face another Problem | Gautham Menon is one of the few directors who has created a fan base in Tamil cinema | Dhanush | Megha Akash

எனை நோக்கி பாயும் தோட்டா வெளியீட்டு உரிமையை வாங்கியிருக்கும் கே ஸ்டுடியோஸ் நிறுவனம் பாகுபலி 2 தயாரிப்பாளர்களுக்கு நஷ்ட ஈடு தரவேண்டியது பாக்கி உள்ளதாம்.

ENPT film face another Problem :

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் படையை உருவாக்கி வைத்திருக்கும் வெகுசில இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன்.

கடைசி ஒன்பது ஆண்டுகளில் இவருடைய படங்கள் நான்கு மட்டுமே வெளியாகி இருந்தாலும் இவருடைய படத்துக்காக ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது.

இயக்குநரான எனை நோக்கி பாயும் தோட்டா பிரபலம் – ஆனால் படம் மட்டும் இன்னும் வரல!

இந்நிலையில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் இவருடைய எனை நோக்கி பாயும் தோட்டா படம் இந்த சம்மரில் திரைக்குவரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது அந்த படம் வெளியாவதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை.

இதன் உச்சமாக தற்போது இப்படத்திற்கு இன்னொரு சிக்கல் வந்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியிருக்கும் கே ஸ்டுடியோஸ் நிறுவனம் பாகுபலி 2 தயாரிப்பாளர்களுக்கு நஷ்ட ஈடு தரவேண்டியது பாக்கி உள்ளதாம்.

அதை கொடுத்தால்தான் இந்த படமும் சிந்துபாத் படமும் திரைக்கு வருமாம். இதனால் எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு கூடுதல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.