Enna Solla Pogirai Shooting Spot Photos

குக்கு வித் கோமாளி அஸ்வின் நடித்துவரும் என்ன சொல்ல போகிறாய் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Enna Solla Pogirai Shooting Spot Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித்து கோமாளி. இதுவரை இரண்டு சீசன்கள் முடிவடைந்துள்ளன. விரைவில் மூன்றாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் அஸ்வின். அதேபோல் கோமாளியாக பங்கேற்ற புகழ், சிவாங்கி மற்றும் பாலா ஆகியோரும் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தனர்.

மொயின் அலி-ஜோஸ் பட்லர் ரன்மழை : பாகிஸ்தான் வீழ்ந்த கள விவரம்..

தற்போது அஸ்வின் மற்றும் புகழ் ஆகியோர் இணைந்து டிரைடன் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் முடிந்திருந்த நிலையில் தற்போது சூட்டிங் தொடங்கியுள்ளது.

இன்னைக்குத்தான் உருப்படியான காரியம் பண்ணிருக்க – Madhurai Muthu-வின் அட்டகாசமான Shopping | VelavanHD

படக்குழுவினர் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி ஷூட்டிங்கை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

புகழ் மற்றும் அஸ்வின் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.