Web Ad 2

துல்கர் சல்மான் நடிப்பில் ‘காந்தா’ படம், ஓடிடி.யில் ரிலீஸ்..

துல்கர் சல்மான் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘காந்தா’. படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதே நேரம் துல்கர் சல்மானின் நடிப்புக்கு பெரும் பாராட்டுக்கள் குவித்தது. இந்நிலையில் ‘காந்தா’ ஓடிடி வெளியீடு குறித்து பார்ப்போம்.

‘காந்தா’ படம் வருகின்ற 12-ந்தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் ‘காந்தா’ கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், ஓடிடி தளத்தில் பெரியளவில் கவனம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் பாக்ஸ் ஆபீஸில் முதல் மூன்று நாட்களில் ரூ. 24.50 கோடி கலெக்சன் பெற்றது. கிட்டத்தட்ட மொத்தமாக ரூ. 30 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்து இருக்கலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துல்கர் சல்மான் இந்த படத்தில் நடித்ததுடன் தயாரிக்கவும் செய்தார். அவருடைய வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் நடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா நிறுவனங்கள் இணைந்து காந்தாவை தயாரித்தன. செல்வமணி செல்வராஜ் இயக்கிய இப்படத்தில் துல்கர் சல்மானுடன் பாக்யஸ்ரீ போஸ், சமுத்திரக்கனி, ராணா, காயத்ரி உள்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பான் இந்திய மொழிகளில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசான ‘காந்தா’. வெளியீட்டுக்கு முன்பாக பிரீமியர் ஷோவில் பாராட்டுக்களை குவித்த நிலையில், ரிலீசுக்கு பின்பாக கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.

1950 களில் சென்னையில் நடக்கும் சம்பவங்களாக இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டு இருந்தது. அன்றைய காலத்து கலாச்சார பின்புலம், உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் ‘காந்தா’ உருவாக்கப்பட்டு இருந்தது. ஒரு ஹீரோவுக்கும், இயக்குநருக்கும் இடையில் நடக்கும் ஈகோ போராட்டம் ஆகியவற்றை மையமாக வைத்து வெளியான இந்த படத்தில் துல்கர் சல்மானின் நடிப்பு பெருமளவில் பாராட்டுக்களை குவித்தது.

dulquer salmaan act kaantha movie ott release

dulquer salmaan act kaantha movie ott release