போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீ காந்த் கைது: திரையுலகில் பரபரப்பு

தமிழ் சினிமாவில் ‘ரோஜா கூட்டம்’ படம் மூலமாக ஸ்ரீகாந்த் அறிமுகமாகி தொடர்ந்தார். தற்போது சினிமா பிஸியில் என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஸ்ரீ காந்த் மீது போதைப்பொருள் விசாரணை நடைபெற்று வருகிறது.
அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, அவர் 40 முறை போதைப் பொருள் வாங்கியது தெரிய வந்ததை அடுத்து, ஸ்ரீகாந்த் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் பயன்படுத்தியதாக பிரதீப் குமார் மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 கிராம் கொக்கைனை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த நேரத்தில், நுங்கம்பாக்கம் பாரில் நடந்த சண்டையின் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் நிர்வாகி பிரசாத் கைது செய்யப்பட்டார். அவர் போதைப் பொருள் டீலராக செயல்பட்டு வந்ததாக சொல்லப்பட்டதை அடுத்து, போலீசார் பிரசாத்தின் போனை சோதனை செய்தனர்.
அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் என்பவரிடம் போலீசார் விசாரித்தனர். அந்த விசாரணையில், ஸ்ரீகாந்த் பிரசாந்திடம் இருந்து போதை பொருளை வாங்கி பயன்படுத்தியதாக கூறினார்.
ஸ்ரீகாந்த் போதைப் பொருளை பெற்று பயன்படுத்தி வந்ததாக பிரதீப் கூறியதை தொடர்ந்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு ஸ்ரீகாந்த் அழைத்து வரப்பட்டார். அவர் போதை மருந்தை உட்கொண்டாரா என்பதை தெரிந்து கொள்வதற்காக ராஜூவ் காந்தி மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, போலீசார் ஸ்ரீகாந்தை கைது செய்தனர்.
மேலும், பிரதீப் குமார் அளித்த வாக்கு மூலத்தில், ஸ்ரீகாந்தும் மற்றொரு நடிகரான ஸ்ரீ கிருஷ்ணாவும், பிரசாத் மூலமாக தன்னிடமிருந்து கொக்கைன் வாங்கி கிளப் மற்றும் சினிமா பார்ட்டிகளில் அதை பயன்படுத்தினார்கள். அவர்கள் பயன்படுத்தியதை நானே நேரடியாக பார்த்தேன் என கூறியுள்ளார்.
மேலும், 40 முறை பிரசாத்துக்கு போதைப்பொருளை நான் சப்ளை செய்திருக்கிறேன். இதன் மூலமாக லாபம் மட்டும் 4 லட்சம் ரூபாய் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. ஜிபே மூலம் ரூ 12 ஆயிரம் கொடுத்து போதைப்பொருளை நடிகர் ஸ்ரீகாந்த் வாங்கியுள்ளார் என்றும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதில், பிரசாத் முதல் குற்றவாளியாகவும், இரண்டாவது குற்றவாளியாக ஜான், மூன்றாவது குற்றவாளியாக ஸ்ரீகாந்த் சேர்க்கப்பட்டு இருக்கும் நிலையில், இதில், தொடர்புடைய மேலும் ஒரு நடிகரான ஸ்ரீ கிருஷ்ணா உள்ளிட்ட அடுத்த பிரபலங்களும் போதைப்பொருள் வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். இந்நிகழ்வு திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
