Draupadi Overall Collection Report
சர்ச்சைகளால் பெரிய அளவில் பேசப்பட்ட திரௌபதி நல்ல வசூலை பெற்றுள்ளது.

Draupadi Overall Collection Report : தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலமாக இயக்குனரானவர் மோகன் ஜி. இந்த படத்தை தொடர்ந்து இவர் திரௌபதி படத்தை இயக்கி இருந்தார்.

பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த இப்படம் கிட்டத்தட்ட 300 தியேட்டர்களில் வெளியானது. இதுவரை ஓடி கொண்டிருந்த இந்த படம் தியேட்டர்கள் மூடப்பட்டதால் முடிவுக்கு வந்தது.

18 நாளில் மொத்தம் ரூ 14.28 கோடி வசூல் செய்திருப்பதாக டிராக்கர் ஒருவர் பதிவு செய்ய அதற்கு மோகன் ஜி தன்னுடைய பதிலை பதிவு செய்து வசூல் உண்மை தான் என்பதை உறுதி செய்துள்ளார்.

மேலும் அந்த பதிவில் இந்த வெற்றியை கொடுத்த உஙகள் அனைவருக்கும், ஈசனுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

திரௌபதி படத்துடன் சேர்ந்து வெளியான துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படமே 18 நாளில் ரூ 11.3 கோடியை தான் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.