டான் பட இயக்குனருடன் கைகோர்க்க உள்ளார் முன்னணி நடிகர் ஒருவர்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்று டான்.

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இவர் தளபதி விஜய் வைத்து படத்தை இயக்கப் போவதாக தகவல் பரவியது. ஆனால் விஜய் தற்போது படங்களில் பிசியாக உள்ள காரணத்தினால் அதற்கு வாய்ப்பில்லை.

இப்படியான நிலையில் இவர் அடுத்ததாக தெலுங்கு நடிகர் நாணியை வைத்து படம் இயக்கப் போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் எனவும் தெரியவந்துள்ளது.

இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.