சிவகார்த்திகேயனின் டான் படத்தின் சிங்கிள் ட்ராக் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Don First Single Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. வசூலிலும் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் முதன் முறையாக 100 கோடியை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திலும் டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் தான் நாயகியாக நடித்துள்ளார். அனிருத் இசையமைக்க சிபிச்சக்கரவர்த்தி படத்தை இயக்கியுள்ளார்.

சிவகார்த்திகேயன் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் குறித்த அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என லைக்கா நிறுவனம் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதன்படி தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் டான் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‌‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.