கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!
கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வணக்கம் சென்னை படத்தை இயக்கி அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. அதனைத் தொடர்ந்து காளி மற்றும் பேப்பர் ராக்கெட் போன்ற படங்களை இயக்கியிருந்தார்.
சமீபத்தில் ஜெயம் ரவியை ஹீரோவாக வைத்து காதலிக்க நேரமில்லை என்ற படத்தை இயக்கி இருந்தார். அதில் யோகி பாபு, வினய், லட்சுமி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, வினோதினி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து தற்போது இயக்கப் போகும் புதிய படத்தின் கதையை விஜய் சேதுபதிக்கு சொல்லியுள்ளார்.அவருக்கும் கதை பிடித்துப் போனதால் ஓகே சொல்லி உள்ளாராம். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
