
பிச்சைக்காரன் 3 படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் பிச்சைக்காரன். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடித்திருந்தார்.
இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து பிச்சைக்காரன் படத்தின் மூன்றாம் பாகமும் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. முதல் இரண்டு பாகங்களை காட்டிலும் மூன்றாம் பாகம் அதிக பட்ஜெட் உடன் அதாவது 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
