Siva Next Movie

Siva Next Movie : விஸ்வாசம் படத்திற்கு பிறகு சிறுத்தை சிவாவின் அடுத்த ஹீரோ யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சிவா. இவரது இயக்கத்தில் தமிழில் முதல் முதலாக வெளியாகி இருந்த படம் சிறுத்தை.

இந்த படத்தின் ஹாட்ரிக் வெற்றிக்கு பிறகு தல அஜித்துடன் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தற்போது நான்காவது முறையாக இந்த கூட்டணி தொடர்ந்து வருகிறது.

தல ரசிகர்களும் விவேகம் படத்துடன் சிவாவுடனான கூட்டணி போதும் என கூறி வந்தனர். ஆனால் அஜித் சிவாவிற்கு இறுதி வாய்ப்பாக விஸ்வாசம் பட வாய்ப்பை கொடுத்துள்ளார்.

இந்த படத்துடன் அஜித், சிவா கூட்டணி முடிவுக்கு வருவது உறுதியாகியுள்ளது. சிவா தன்னுடைய அடுத்த படத்திற்காக சிவகார்த்திகேயனுடன் இணைய இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதுமட்டுமில்லாமல் முதல் முறையாக சிவாவும் சிவாகார்த்திகேயனும் இணைய உள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

தல அஜித்தும் விஸ்வாசம் படத்திற்கு பிறகு தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தின் இயக்குனரான எச். வினோத்துடன் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.