‘சிறுத்தை’ சிவாவின் தம்பி நடிகர் பாலாவுக்கு மூன்றாவது திருமணம்; மாமா மகளை மணந்தார்..

இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரரும் நடிகருமான பாலாவுக்கு, மூன்றாவதாக திருமணம் எளிமையாக நடைபெற்றது. இது குறித்த விவரம் காண்போம்.

நடிகர் பாலா, தமிழில் ‘ அன்பு, கலிங்கா போன்ற நடித்துள்ளார். பின்னர் மலையாளத் திரை சென்று பிரபல நடிகராக வலம் வந்தார்.

இந்நிலையில், பாலாவுக்கும், பாடகி அம்ரிதா சுரேஷீக்கும் திருமணம் நடந்து 9 வருடம் வாழ்ந்தனர். பெண் குழந்தையும் உள்ளது.

பின்னர், அம்ருதா உடனான கருத்து வேறுபாடுகளால் ஏற்பட்ட விவாகரத்துக்கு பின், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, ரகசியமாக அவருடன் வாழ்க்கை நடத்தியதாக கூறப்படும் நிலையில், அந்த பெண் யார் என்பதை அறிவிப்பதற்கு முன்பே, 3 வருடங்கள் அவருடன் வாழ்ந்து சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இவர்களின் விவாகரத்தை நீதிமன்றம் அறிவித்து சில மாதங்களே ஆகும் நிலையில், தற்போது நான்காவது திருமண உறவில் இணைந்துள்ளார் பாலா.

இவர் தற்போது தன்னுடைய மாமா மகள் கோகிலா என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுடைய திருமணம் காலூர் பாகக்குளம் கோவிலில் மிகவும் எளிமையாக நடந்து முடிந்துள்ளது.

திருமணத்திற்கு பின்னர், பாலா ஊடகங்களிடம் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். “கோகிலா என் உறவினர், என் அம்மா எங்களுடன் இந்த மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாட இங்கே இருந்திருக்க வேண்டும்” என நான் விரும்பினேன்.

ஆனால், அவருக்கு வயது 74 ஆகிறது. அவருக்கு உடல்நிலை சரியில்லை, ஆனால் அவர் உண்மையில் கலந்து கொள்ள விரும்பினார். கோகிலா தனது இளமை பருவத்தில் இருந்து கொண்டிருந்த கனவை இந்த திருமணம் நிறைவேற்றும்’ என நம்புகிறேன்.

கோகிலாவுக்கு மலையாளம் பேசத் தெரியாது என்றாலும், கடந்த ஒரு வருடமாக எனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் அவர் எனக்குப் பெரும் ஆதரவாக இருந்து வருகிறார்’ எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பாலாவின் நான்காவது திருமணம் குறித்த வீடியோஸ் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, பாலா தன்னுடைய முதல் மனைவி அம்ரிதா மற்றும் மகள் அவந்திகாவை பின் தொடர்ந்து தொந்தரவு செய்வதாக அமிர்தா சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில், அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், அவந்திகா கடந்த மாதம், தன்னுடைய தந்தை தன் மீது பாசம் இருப்பதாக கூறுவதில் துளியும் உண்மை இல்லை. அவர் சிறுவயதில் தன்னை பட்டினி போட்டார். அம்மாவை அடித்து கொடுமைப்படுத்தினார் அந்த நினைவுகள் இப்போதும் என்னுடைய மனதில் உள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் இது குறித்து மிகவும் உருக்கமாக விளக்கமும் அளித்திருந்தார்.

விளையாட்டுதான், ஆனாலும் அதற்கும் விதிமுறைகள் இருக்கும்போது.. திருமண பந்தம் மிக புனிதமானது என யாவரும் உணர்வோம்.!

director siruthai siva brother and actor bala 3rd marriage...

director siruthai siva brother and actor bala 3rd marriage…