லோபட்ஜெட் ‘டிராகன்’ ஹைபட்ஜெட் ‘பாய்ஸ்’: இயக்குனர் ஷங்கர் கருத்துக்கு, நெட்டிசன்ஸ் கேள்வி

‘டிராகன்’ படம் பற்றி இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ள பதிவு பார்ப்போம்..

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் நடித்துள்ள ‘டிராகன்’ திரைப்படம் தற்போது ரூ.55 கோடி வசூலித்துள்ளது. ரூ.35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டிராகன் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்துள்ளது. இதற்கு முன்னதாக பிரதீப் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ படமும் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்தது.

சில நேரங்களில், சிறு பட்ஜெட் படங்கள் அதிக வசூல் குவிக்கிறது. பெரிய பட்ஜெட் படங்கள் படுதோல்வியை சந்திக்கிறது. காரணம், போரடிக்காத ஸ்கிரிப்ட் வொர்க் தான் ஹிட்டாகும். பட்ஜெட் எல்லாம் அப்புறம்.

இந்நிலையில், ‘டிராகன்’ படம் பார்த்த இயக்குனர் ஷங்கர் படம் குறித்து கூறியிருப்பதாவது: ரொம்பவே அழகான படம். ஒவ்வொரு கதாபாத்திரமும் அவர்களுக்கான முழுமையான பயணத்துடன் சிறப்பாக இருந்தது.

படத்தோட கடைசி 20 நிமிடங்கள் கண்கலங்கச் செய்தது. ‘டிராகன்’ படத்தில் சொல்லப்படும் விஷயம், இந்த உலகிற்கு முக்கியமானது’ என தெரிவித்துள்ளார்.

டிராகன் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஏஜிஎஸ், பிரதீப் மற்றும் அஷ்வத் கூட்டணியில் புதிய படம் உருவாக இருக்கிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.

இது தொடர்பாக இணையவாசிகள், ‘பாய்ஸ்’ அவசியம் பார்த்து, பாடம் கற்க வேண்டிய படம்’ என்கிறாரோ ஷங்கர்?’ -என குறும்பாக அவர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தையும் கம்பேரிங் செய்து கேட்டிருப்பது வைரலாகி வருகிறது.