Ajith Vs Atlee : அஜித் நேர்மை உங்க கிட்ட இல்லை என அட்லீயை துணை இயக்குனர் விளாசி எடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான அட்லீ இதுவரை இயக்கிய படங்கள் அனைத்தும் காப்பி என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.
இறுதியாக விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாகி இருந்த மெர்சல் திரைப்படமும் ரஜினியின் மூன்று முகம் படத்தின் ரீமேக் போல இருந்ததாக பேச்சு கிளம்பியது.
ஆனால் இந்த முறை தளபதி 63 படம் முடிவடைவதற்கு முன்பாகவே இந்த குற்றசாட்டு எழுந்து விட்டது. துணை இயக்குனர் செல்வா என்பவர் தளபதி 63 என்னுடைய கதை என கூறியிருந்தார்.
இதனையடுத்து அட்லீ இந்த பிரச்னையை கை விட்டு விடுமாறும் தன்னை சமாதானப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித்திடம் இருக்கும் நேர்மை விஜயிடம் இல்லை. அஜித் கூட தான் பில்லா படத்தை கையில் எடுத்திருந்தார்.
ஆனால் அவர் முறையாக ரைட்ஸ் வாங்கி இருந்தார். அட்லீ காப்பி அடித்து படமெடுக்குகிறார். எல்லாமே என்னுடைய பெயரில் வர வேண்டும் எனவும் நினைக்கிறார் என விளாசி எடுத்துள்ளார்.