Director Rajkumar Interview About Ajith
Director Rajkumar Interview About Ajith

விஜய் அஜித்திடம் தன்னை சிபாரிசு செய்ததாக இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார்.

Director Rajkumar Interview About Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சுறா.

இயக்குனர் ராஜ்குமார் இயக்கிய இந்த படம் விஜய்க்கு பெரும் தோல்வி படமாக அமைந்தது. இந்தப்படத்தில் விஜய் நடித்த போது அஜித்திடம் அண்ணே இவர் இயக்கத்தில் நடிங்க நிறைய கதை வைத்திருக்கிறார் என சிபாரிசு செய்துள்ளார்.

விக்ரம் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா? இதோ முழு விவரம்.!

ராஜ்குமாரும் சுறா படத்தை முடித்துவிட்டு எப்படியாவது அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்கி விட வேண்டும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்துள்ளார்.

ஆனால் சுறா கொடுத்த தோல்வி அவரை அதோடு முடக்கிப் போட்டு விட்டது. இதனால் இன்று வரை அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

சுறா படத்தின் தோல்வியால் நான் பெரிய நடிகர்களை இயக்க வேண்டும் என்ற ஆசையை கைவிட்டு விட்டதாக ராஜ்குமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.