Hit Movies in Vikram Career
Hit Movies in Vikram Career

விக்ரம் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

Hit Movies in Vikram Career : தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் ஒருவர் விக்ரம். படத்திற்காக ஒல்லியாக வேண்டும் என்றாலும் சரி, குண்டாக வேண்டும் என்றாலும் சரி அல்லது எப்படி மாற வேண்டும் என்றாலும் சற்றும் யோசிக்காமல் அப்படியே அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பவர் இவர்.

இவரது திரைப்பயணத்தில் பல தோல்வி படங்களை கொடுத்து இருந்தாலும் இன்று வரை அவருக்கான இடம் தமிழ் சினிமாவில் அப்படியே தான் இருந்து வருகிறது. தோல்வி படங்களிலும் விக்ரமின் நடிப்பு எப்போதும் பாராட்டும் விதத்தில் தான் இருந்துள்ளது.

ஒரே படத்தில் இரண்டு ஹீரோக்கள் டப்பிங் பேசிய சியான் விக்ரம், என்ன படம்? யார் அந்த ஹீரோக்கள் தெரியுமா?

அதைப்போல் இவரது நடிப்பில் பல படங்கள் பயங்கர ஹிட் கொடுத்துள்ளது. அந்த படங்கள் என்னென்ன என்பது குறித்த விவரம் இதோ

சேது (1999)
தில் (2001)
காசி (2001)
ஜெமினி (2002)
தூள் (2003)
சாமி (2003)
பிதாமகன் (2003)
அண்ணியன் (2005)
கந்தசாமி (2009)
தெய்வ திருமகள் (2011)
ஐ (2015)
இரு முகன் (2016)
இன்று நடிகர் விக்ரமின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர். கலக்கல் சினிமாவும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

இனிவரும் காலங்களிலும் அவர் தொடர்ச்சியாக பல வெற்றிப்படங்களை கொடுப்பார் என எதிர்பார்க்கிறோம்.