விஜய்யின் ‘ஜனநாயகன்’ அப்டேட்ஸ்..

தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவர் ஹெச்.வினோத்.
அவரது பிறந்த நாளை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது இந்த படத்தின் படப்பிடிப்பு பணியின்போது எடுக்கப்பட்டது. ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியின் மூலம் அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ளார் விஜய். முழுநேர அரசியலில் கவனம் செலுத்தும் வகையில் இதுவே அவரது கடைசி படம் என விஜய் ஏற்கனவே அறிவித்து விட்டார். அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, கவுதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜு உள்பட பலர் நடித்துள்ளனர்.
இச்சூழலில், இயக்குநர் ஹெச். வினோத்துக்கு பிறந்த நாள். இதனையொட்டி வெளியிட்டுள்ள
வீடியோவில் படத்தின் நாயகன் விஜய், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் உள்பட படக்குழுவினர் உள்ளனர்.
விஜய்யின் அரசியல் பேசும் ‘ஜனநாயகன்’ செம அமர்க்களமாய் ரசிகர்களை வசீகரிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.!
