
மாரிமுத்து இல்லாமல் எதிர்நீச்சல் சீரியல் தொடர் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து மாரடைப்பு காரணமாக மரணமடைந்த சம்பவம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

யார் நடித்தாலும் எதிர்நீச்சல் சீரியலில் அவருடைய கதாபாத்திரத்தை நிறைவு செய்ய முடியாது என ரசிகர்கள் பலரும் கருத்துக்கூறி வருகின்றனர். இப்படியான நிலையில் குணசேகரன் கதாபாத்திரமே இல்லாமல் சீரியலை தொடர இயக்குனர் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன.
அதற்கேற்றார் போல நேற்றைய எபிசோடில் லெட்டர் எழுதி விட்டு குணசேகரன் காணாமல் போக விசாலாட்சி ஒருவரை சந்தித்து ஓலைச்சுவடியை வைத்து குணசேகரன் குறித்து கேட்க அப்போது ஜோசியர் இவர் இரண்டாவது மகன் இவருக்கு ஒரு அண்ணன் இருப்பார். உண்மையா பொய்யா என கேட்க ஞானம் இவர் தான் பெரியவர் என்று சொல்ல ஜோசியர் இல்ல இவருக்கு ஒரு அண்ணன் இருப்பாரு அப்படித்தான் ஓலைச்சுவடி சொல்லுது என்று கேட்க விசாலாட்சி திருத்திருவன முழிக்கிறார்.
இதனால் மாரிமுத்து இடத்தை நிரப்ப வேறு ஒரு நடிகர் நடிக்க இருப்பது உறுதியாகிவிட்டது. ஆனால் அது ஆதி குணசேகரன் கதாபாத்திரம் இல்லை அவருடைய அண்ணன் கதாபாத்திரம் எனவும் இந்த காட்சிகளின் மூலம் தெரிய வருகிறது.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் குணசேகரன் கதாபாத்திரம் இல்லாமல் தான் இனி சீரியல் நகரும் என எதிர்பார்க்கலாம்.