ரஜினி-கமல் இணையும் படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறாரா?

Web Ads

ரஜினி-கமல் இணையும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கவிருக்கிறார் எனவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல் பரவின. இது பற்றிய உண்மை நிலவரம் என்ன என காண்போம்..

தமிழ் சினிமாவில் கோமாளி, லவ் டுடே, டிராகன் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது ‘ட்யூட்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனால் தற்போது, இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கி இருக்கிறார். இது தொடர்பாக பிரதீப் தெரிவிக்கையில்,

‘ரஜினி-கமல் இணையும் படத்தை இயக்குகிறீர்களா? என்றால், அந்தப் படத்தை நான் இயக்கவில்லை. இப்போது நான் முழுமையாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். ஆகையால், இப்போது அதைப் பற்றி பேசினால் சரியாக இருக்காது’ என தெரிவித்துள்ளார். மேலும், லவ் டுடே மற்றும் டிராகன் படங்கள் பார்த்துவிட்டு ரஜினி பாராட்டியதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் பிரதீப்.

‘டிராகன்’ படத்தில் சிகரெட்டை சுண்டிவிடும் காட்சியை ரஜினி நடித்துக் காட்டியதையும் குறிப்பிட்டு பேசியுள்ளார். ‘எல்.ஐ.கே’ படத்துக்குப் பிறகு, தான் இயக்கி நடிக்கும் சயின்ஸ் பிக்சன் கதையில் மட்டுமே கவனம் செலுத்தவிருப்பதை உறுதி செய்திருக்கிறார் பிரதீப்.

கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் உள்பட பலர் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘ட்யூட்’. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

direct a rajini and kamal film pradeep ranganathan replies
direct a rajini and kamal film pradeep ranganathan replies