விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் தள்ளிப் போகிறதா?

Web Ads

கரூரில் விஜய்யின் அரசியல் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நெரிசல் காரணமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால், விஜய்மீது கடும் விமர்சனங்கள் பாய்ந்தன என்பது தெரிந்ததே.

எனவே, இம்மாதம் வெளியாகவிருந்த ‘ஜனநாயகன்’ படத்தின் சிங்கிள் பாடல் தள்ளிப்போனதாக சொல்லப்படுகின்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ சிங்கிள் வெளியாவதாக இருந்தது. ஆனால், தற்போது இருக்கும் சூழலில் பாடல் வெளியிடுவது சரியாக இருக்காது என தள்ளி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருந்த ‘ஜனநாயகன்’ படம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. கண்டிப்பாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ வெளியாகும் என்றும் தகவல்கள் வருகின்றன.

தற்போதைய சூழலில், இந்த படத்தின் ப்ரோமோஷனை துவங்கினால் மேலும் சர்ச்சைக்கு உள்ளாகலாம். அதனால், இப்படம் சொன்னபடி வெளியாகுமா? இல்லை தள்ளிப்போகுமா? என கோலிவுட் பேச்சுகள் இருக்கின்றன. ஹெச்.வினோத் இயக்கத்தில் அரசியல் பேசும் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ சொன்னபடி வெளியாகி வசூல் சாதனை படைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

rumours about vijay jananayagan movie postponed stunned
rumours about vijay jananayagan movie postponed stunned