தளபதி 66 படத்தின் கதை என்ன என்பது குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு பேசியுள்ளார்.

Dhil Raju About Vijay 66 Story : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.

தமன் இசையமைக்கும் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிறது. நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷ்யாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தை தில் ராஜு அவர்கள் தயாரிக்கிறார்.

அவர் தெலுங்கு பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் தளபதி அறுபத்தி ஆறு படத்தின் கதை குறித்து கேட்டதற்கு இது முழுக்க முழுக்க குடும்ப பாங்கான கதை. ஆக்ஷன், எமோஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இவருடைய இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.