தெலுங்கில் தனுஷின் VIP திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி பிறமொழி படங்களிலும் நடித்து நல்ல வரவேற்பை பெற்று ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ள இவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி திரைக்கு வர இருப்பதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் வெளியான “VIP” எனப்படும் “வேலையில்லா பட்டதாரி” திரைப்படம் தெலுங்கில் “ரகுவரன் பி டெக்” என்ற பெயரில் ஏற்கனவே வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று இருந்ததை தொடர்ந்து தற்போது 9 ஆண்டுகளுக்குப் பிறகு அப்படத்தை மீண்டும் அங்குள்ள திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். அப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் அதே உற்சாகத்துடன் கொண்டாடி அதிரவிடும் வீடியோ தனுஷ் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.