ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் குறித்து நடிகர் தனுஷ் பதிவிட்டிருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் தனுஷ். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவரது நடிப்பில் வரும் டிசம்பர் 15ஆம் தேதி கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து D50 என்னும் திரைப்படத்தில் கவனம் செலுத்தி வரும் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினியின் நடிப்பில் வரும் 10 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் ஜெயிலர் படம் குறித்து பகிர்ந்திருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

அதாவது, ஜெயிலர் படம் வெளியாக இன்னும் 3 நாட்கள் இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகரான நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “இது ஜெயிலர் வாரம்” என்று குறிப்பிட்டு பகிர்ந்திருக்கும் ட்விட்டர் பதிவு ரசிகர்கள் மத்தியில் கமெண்ட்களை குவித்து ட்ரெண்டிங்காகி வருகிறது.