தனுஷ் நடிப்பில் 3 படங்கள் ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்
தனுஷ் நடித்த 3 படங்கள் இந்தாண்டு ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்..
பாலிவுட் சினிமாவில் ராஞ்சனா என்ற படத்தின் மூலம் தனுஷை ஹிந்தி திரையுலகில் ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்தார் ஆனந்த் எல்.ராய். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் நடித்த ‘அத்ராங்கி ரே’ படத்தில் இணைந்தார். இப்படம் நேரடியாக ஓடிடி.யில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது.
இதனைத் தொடர்ந்து ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தில் தனுஷ் விமானப்படை அதிகாரியாக வருகிறார் என தெரிகிறது. தற்போது, இப்படத்திற்காக தனுஷ் தன் கெட்டப்பை மாற்றியிருக்கிறார். செம ஸ்மார்ட் லுக்கில் இருக்கிறார்.
இப்படத்தின் ஷுட்டிங் தளத்திலிருந்து தனுஷின் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில், தனுஷ் விமானப்படை அதிகாரி உடையில் செம ஸ்டைலாக இருக்கின்றார். இப்படம் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷுக்கு ஜோடியாக க்ரிதி சனோன் இணைந்துள்ளார். காதல் மற்றும் ட்ராமா கலந்த ஒரு எமோஷனலான படமாக இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் தன் கெட்டப்பை மாற்றி நடிக்கின்றார் என்பதாலும் இப்படத்திற்கு ஹைப் உள்ளது.
இந்நிலையில் தனுஷ் நடிப்பில் இன்னும் சில வாரங்களில் ‘குபேரா’ படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. அவ்வகையில் ஜூன் மாதம் குபேரா, அக்டோபர் மாதம் ‘இட்லி கடை’ மற்றும் ஆண்டு இறுதியில் ‘தேரே இஷ்க் மெய்ன்’ என இந்த வருடம் மட்டுமே தனுஷ் நடிப்பில் 3 படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படங்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.