தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோக்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.

மாபெரும் நட்சத்திரபட்டாலங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. அவ்வப்போது படம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் தற்போது புதிய அப்டேட்டாக தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிடவுள்ளதாகவும் அடுத்த வாரத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி குறித்த அறிவுப்புடன் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் உற்சாகமடைந்த தனுஷ் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.