அவசர அவசரமாக அமெரிக்கா கிளம்புகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Details of Rajinikanth Trip to America : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பீஸ்ட் படத்தினை இயக்கி உள்ள நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளது.

இந்த நிலையில் அதற்குள் தன்னுடைய வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை முடித்து விட அவசர அவசரமாக அமெரிக்கா கிளம்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓரிரு நாட்கள் தங்கி இருந்து பரிசோதனையை முடித்த பிறகு இந்தியாவுக்கு திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.