முதலிரவில், காதல் மனைவி தீபிகா படுகோனேவுடன் நான்: ரன்வீர் ஓபன் டாக்..
பாலிவுட்டில், ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே இருவரும் கடந்த 2008-ம் ஆண்டு ‘பச்னா ஏ ஹசீனோ’ படத்தில் நடித்தபோது காதலிக்கத் தொடங்கினார்.
பொதுவாக, காதல் முற்றிய நிலையில், சில காதலர்கள்.. கையிலோ நெஞ்சிலோ பச்சை குத்திக்கொள்வது போல, தீபிகா தேவதை தனது கழுத்தில் ரன்பீர் கபூரின் பெயரை டாட்டூவாகப் போட்டுக் கொண்டு திரிந்தார் தீபிகா. அந்த அளவுக்கு நெருக்கமாக இருந்த இவர்களின் உறவில் திடீரென விரிசல் ஏற்பட்டு பிரிந்ததால் தீபிகா மன உளைச்சலுக்கு ஆளானார். இதை தீபிகாவே பேட்டிகளில் கூறியிருக்கிறார்.
பின்னர், ‘ராம்-லீலா’ படப்பிடிப்பில் மீண்டும் ரன்வீர் சிங்கை சந்தித்தார் தீபிகா. இந்த சந்திப்பு நட்பாக மாறி நாளடைவில் காதலாக மலர்ந்தது. இதையடுத்து இருவரும் மீண்டும் தங்கள் காதல் வாழ்க்கையை தொடங்கி, சில ஆண்டுகள் உருகி உருகி காதலித்த பின்னர், கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களது திருமணம் இத்தாலியின் லேக் கோமோ நகரில் பிரமாண்டமாக நடைபெற்றது. தற்போது தீபிகா – ரன்வீருக்கு ‘துவா’ என்ற பெயரில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. தீபிகாவுக்கு கடந்த ஆண்டு தான் குழந்தை பிறந்ததால், அவர் தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகியிருக்கிறார். ரன்வீர் பிஸியாக நடித்து வருகிறார்.
இதனிடையே, கரண் ஜோஹரின் ‘காஃபி வித் கரண் 7’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரன்வீர் சிங், தனது அந்தரங்க ரகசியங்களை வெளிப்படையாக பகிர்ந்துகொண்டார். குறிப்பாக தனது முதலிரவு ரகசியத்தை பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்நிகழ்ச்சியில், ‘திருமண சடங்குகளுக்குப் பிறகு சோர்வாக இருந்தீர்களா? என கரண் கேட்டபோது,
“ரன்வீர் ‘இல்லை’ என தலையை ஆட்டினார். பின்னர், தானும் தீபிகாவும் முதலிரவில் மிகவும் நெருக்கமாக இருந்ததாக ஒப்புக்கொண்டார். மேலும், தனது வேனிட்டி வேனிலும் இதைச் செய்தேன் எனவும் கூறினார்.
சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லாமல் பார்த்துக் கொண்டேன். மனநிலையை மாற்றவும் உணர்ச்சியை தூண்டும் விதமான பல பாடல்கள் பிளேலிஸ்ட்டில் தன்னிடம் இருந்ததாகவும்’ புன்னகையாய் கண்சிமிட்டினார் ரன்வீர்.
இது தொடர்பாக, தீபிகாவிடமும் மேலும் விளக்கம் கேட்டு சொன்னால் ரசிகர்கள் அளவற்ற உற்சாகம் கொள்வார்கள்.! நிகழுமா கரண் சார்? என இணையவாசிகள் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.