Pushpa 2

சிம்புவால் நான் நடுத்தெருவில் நிற்கிறேன்: ‘கெட்டவன்’ பட இயக்குனர் நந்து ஆவேசம்..

‘எனது கதையை திருடியிருக்கலாம், ஆனால், வசனத்தை திருடி விட்டார் சிம்பு’ என்ற இயக்குனரின் குமுறல் குறித்து அறிவோம்..

சிம்பு நடித்து பாதியிலேயே நின்ற படம் ‘கெட்டவன்’. இப்படத்திற்காக நீண்ட முடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் சிம்பு இருக்கும் போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகின. ஆனால், இயக்குனருடன் ஏற்பட்ட பிரச்சினையால் படத்தை பாதியிலேயே கைவிட்டார் சிம்பு என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ‘கெட்டவன்’ படத்தை இயக்கிய ஜி.டி.நந்து ஆவேசமாய் கூறுகையில், ‘கெட்டவன் திரைப்படம் டிராப் ஆன பின்னர், சிம்புவிடம் இருந்து நல்ல செய்தி வரும் என காத்திருந்தேன். இப்படம் எடுத்தபோது, எனக்கு திருமணமாகி குழந்தை பிறந்திருந்தது. அப்போது, சிம்பு எனக்கு ரூபாய் 50 ஆயிரம் கொடுத்தார். அது மருத்துவ செலவுக்கு உதவியாக இருந்தது. அதைப் பற்றி நானே பல பேட்டிகளில் பெருமையாக கூறியிருக்கிறேன்.

சிம்பு, உதவி செய்ததற்கு ஒரு வாரத்திற்கு பின்னர், எனக்கு போன் செய்தார். அப்போது ‘கெட்டவன்’ படத்தின் கிளைமாக்ஸில் வரும் வசனம் பற்றி என்னிடம் கேட்டார். எதற்கு என நான் கேட்டேன்.

அதற்கு, ‘தான் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்துக்கு அந்த டயலாக் தேவைப்படுகிறது. அதை வைத்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது’ என கூறினார். உடனே நானும் எனக்கு உதவியெல்லாம் செய்திருக்கிறாரே என்பதற்காக, அந்த வசனத்தை கூறினேன்.

அந்த வசனம் ‘கெட்டவன்’ படத்துக்கு தான் கரெக்ட் ஆக இருக்கும். ஏனெனில், இந்த படத்தின் முழு சாராம்சத்தையும் கொண்ட வசனமாக அது இருக்கிறது என்பதையும் சிம்புவிடம் எடுத்துக் கூறினேன்.

அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல், அந்த வசனத்தை அப்படியே ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் வைத்து அதை நாசமாக்கிவிட்டார்.

‘கெட்டவன்’ பட கதையை மொத்தமாக திருடி படம் எடுத்திருந்தால் கூட சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனால், எனக்கு உதவுவது போல் வந்து என் படத்தின் வசனத்தை அவர் தூக்கிச் சென்றது ஆதங்கமா இருக்கு. இப்போ நான் நடுத்தெருவுல இருக்கேன்’ என ஜி.டி. நந்து பேசியுள்ளார்.

kettavan movie director gt nandhu slams simbu
kettavan movie director gt nandhu slams simbu