
ஏம்மா ஏய் என்ன பேசி குணசேகரனை தெறிக்க விட்டுள்ளார் பாலா.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் குணசேகரன் அந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிகவும் கவர்ந்திருப்பவர் மாரிமுத்து.
வெள்ளித்திரை நடிகராக பல படங்களில் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் சீரியல் இவரை மிகப்பெரிய அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது. அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் இவர் அடிக்கடி பயன்படுத்தும் எம்மா ஏய் என்ற டயலாக் பட்டி தொட்டி எங்கும் பிரபலம்.
இந்த நிலையில் விஜய் டிவி பாலா குணசேகரனை சந்தித்து எம்மா ஏய் என்ற டயலாக்கை பேசி அவரையே தெறிக்க விட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.