Corona in Raghava Lawrence Trust
Corona in Raghava Lawrence Trust

ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் டிரஸ்ட்டில் உள்ளவர்களுக்கும் கொரானா தொற்று இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Corona in Raghava Lawrence Trust : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் நடன இயக்குனராகவும் என பன்முகத் திறமைகள் உடன் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ்.

தற்போது இந்தியா முழுவதும் பரவி வரும் வைரஸ் தாக்கத்திற்கு ஆக இவர் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

பத்த வச்ச சூர்யா.. அதே ரூட்டை பின்பற்றும் அடுத்த ஹீரோ – கொழுந்து விட்டு எரியும் தமிழ் சினிமா.!

மேலும் இவர் சென்னையில் உள்ள அசோக் நகரில் டிரஸ்ட் ஒன்றை நடத்தி வருகிறார் இதன் மூலம் ஏழை எளிய குழந்தைகளின் கல்விக்கும் அவர்களின் மருத்துவச் செலவுகளுக்கும் உதவியிருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது இந்த ட்ரஸ்டில் உள்ள 10 மாணவிகள் 5 மாணவர்கள் 3 பணியாளர்கள் மற்றும் 2 சமையல்காரர்கள் என மொத்தம் 20 பேருக்கு கொரானா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்கள் சென்னை லயோலா கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

குழந்தைகளுக்கும் கொரானா தொற்று ஏற்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.