Santhanam Follows Surya Style
Santhanam Follows Surya Style

சூர்யாவின் அதே ஸ்டைலை சந்தானமும் பின்பற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

Santhanam Follows Surya Style : ஊரடங்கு உத்தரவு இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப் போட்டு வருகிறது. அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன.

இதனால் தமிழ் சினிமாவில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை அமேசான் பிரைம் வீடியோ மூலமாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

சூர்யாவின் இந்த முடிவு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் இதனை வன்மையாக கண்டித்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் இழுபறியில் இருந்து வரும் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சர்வர் சுந்தரம் படத்தையும் இதே OTT வழியாக வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தகவல்கள் கூறுகின்றன.

OTT வழியாக புதிய படங்கள் ரிலீஸ் என்ற முறையை சூர்யா கொளுத்திப் போட்டு இருப்பது தற்போது கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது.

இதனால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.